அஜித்தின் வீரம் பாடல்கள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு : அதிர்ச்சியடையாத படக்குழு!!

684

Ajithஅஜித், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஓடியோ வெளியீட்டை நாளை நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இருந்தும் இப்படக்குழு துவண்டுவிடாமல் திட்டமிட்டப்படி ஓடியோ வெளியீடு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

சிறு கசிவுகளால் பெரும் கடல் வற்றி போகாது. கள்ளத்தனமாக கசிந்த வீரம் பாடல்களால் தீவிர அஜித் ரசிகர்களுக்கு அந்த படத்தின் கர்ஜிக்கும் பாடல்கள் மேல் உள்ள அபிமானம் சற்றும் குறையவில்லை. ஆர்வமும், பாடல்களின் மேல் உள்ள எதிர்பார்ப்பும் பனி மூட்டத்தை விலக செய்யும்.

வீரம் பட இசை வெளியீடு அதிகார பூர்வமாக வருகின்ற 20ம் தேதி வெள்ளி அன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை ரேடியோ மிர்ச்சியில் ஒலிபரப்பாக உள்ளது. இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும், இயக்குனர் சிவாவும் பாடல்கள் உருவான விதத்தை பற்றிய விவரங்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர். வீரம் விளம்பரம் பரபரப்பாக இயங்க தொடங்கும் தருணம் அது என்று குறிப்பிட்டுள்ளனர்.