பொய் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகை ராதா மீது அவதூறு வழக்கு பதிவுசெய்ய பொலிஸ் அதிரடி முடிவு!!

751

Radhaசுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா தொழில் அதிபர் பைசூல் மீது பாலியல் மோசடி புகார்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு 50 லட்சம் வரைக்கும் பணத்தை சுருட்டிவிட்டு தலைமறைவாக இருக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க பொலிசார் தயங்குவதாகவும் ராதா குற்றம் சாட்டியிருந்ததார்.

இது தொடர்பாக தினமும் பேட்டியளித்த அவர் பைசூல் மீதும் பொலிஸ்சார் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். கமிஷனர் அலுவலகத்துக்கு 2 முறை வந்த அவர் அதிகாரிகளை சந்தித்தும் பேசினார்.

அப்போது தன்னுடைய புகார் மனு குறித்து விசாரணை நடத்தி வரும் வடபழனி பொலிசார் மீதும், பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார். பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக பெண் இன்ஸ்பெக்டர் ரேகா மீதும் புகார் தெரிவித்தார். உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் பைசூலுடன் தினமும் போனில் பேசிக் கொண்டிருக்கிறார் என்றும், ஆனால் அவர் தலைமறைவாக இருப்பதாக பொலிசார் கூறுகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போனார்.

இப்படி பொலிஸ் மீதும், பைசூல் மீதும் அவதூறு பரப்பிய அவர் நேற்று மாலையில் திடீரென அந்தர் பல்டி அடித்துள்ளார்.
வடபழனி பொலிஸ் நிலையத்துக்கு மாலை 6.30 மணி அளவில் அவசரம் அவசரமாக காரில் வந்த ராதா பொலிசாரிடம் சென்று பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி எழுதிக் கொடுத்தார்.

உடனே போலீசார், நீங்கள் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டது. எதைச் சொல்ல வேண்டும் என்றாலும் கோர்ட்டில் போய் சொல்லுங்கள் என்று கூறினர்.
ஆனால் ராதா இதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. எதுவும் பேசாமல் போலீஸ் நிலையத்தைவிட்டு ஓட்டம் பிடித்த அவர் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

பைசூல் கோர்ட்டில் 3 முறை தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் அவரது முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகும் போதெல்லாம் ராதா தனது ஆவேசத்தை வெளிப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இது தொடர்பாக 2 நாட்களுக்கு முன்னர் பேட்டி அளித்தபோது கூட பைசூலுக்கு முக்கிய பிரமுகர்கள் சிலர் அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும், அவரை உடனே போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

நேற்று மாலை 5 மணி அளவில் தனது வக்கீல் ஒருவருக்கு போன் செய்த போதும், பைசூல் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மீண்டும் கமிஷனர் அலுவலகத்துக்கு செல்லலாமா? என்றும் ராதா கேட்டுள்ளார்.

ஆனால் அடுத்த 1 மணி நேரத்தில் பைசூல் மீதான புகார் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது.

தேவையில்லாத குற்றச் சாட்டுகளை கூறி போலீசாரின் பெயருக்கு களங்கம் விளைவித்த ராதா மீது அவதூறு வழக்கு தொடர போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ராதாவின் புகார் மனுவை விசாரித்த அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசாரின் நேரத்தை வீணடித்ததுடன், கெட்ட பெயரையும் ஏற்படுத்திய ராதா மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

இது தொடர்பாக ராதாவை போனில் தொடர்பு கொண்டு இத்தனை நாளும் பைசூல் மீதும் போலீஸ் மீதும் குற்றச் சாட்டுகளை கூறிய நீங்கள் இப்போது திடீரென புகார் மனுவை வாபஸ் பெற காரணம் என்ன என்று கேட்டபோது என்னதான் இருந்தாலும் பைசூல் எனது கணவர்தானே, எத்தனை நாள்தான் அவர் ஓடி ஒளிவார் என்றார்.

எல்லாம் சரிதான், நீங்கள் அவர் மீது கூறிய குற்றச் சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டதும் சார் நான் அப்புறம் பேசட்டுமா என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

மீண்டும் ராதாவை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. திட்டுவதற்கு என்ன வெல்லாம் வார்த்தைகள் உண்டோ, அத்தனையும் போட்டு திட்டிவிட்டு இப்போது பைசூல் மீது ராதாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் பாசத்துக்கு காரணம் தெரியாமல் போலீசார் குழப்பிப் போய் உள்ளனர்.