யாழில் இரண்டு வயது பெண் குழந்தை பணயம் வைத்து நள்ளிரவில் நகை பணம் கொள்ளை..

1270

robbery

யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையை பணயம் வைத்து 22 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகம் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசி, 60 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
வீடென்றில் புகுந்த மூன்று திருடர்கள், பெண் பிள்ளையைப் பிடித்துக் கொண்டு பணம், நகை உள்ளிட்ட பொருட்களை கேட்டு மிரட்டி கொள்ளையடித்துள்ளனர்.

நகைகளை தராது விட்டால் குழந்தையைக் கொல்வோம் என்றும் திருடர்கள் மிரட்டியதைத் தொடர்ந்து அனைத்தையும் கொடுத்து குழந்தையை மீட்டுள்ளனர் பெற்றோர். இதன்பின்னர் திருடர்கள் தப்பித்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.