இசுருபாய கல்வியமைச்சின் கட்டிடத்தில் தீ விபத்து!!

553

Fireபத்தரமுல்லையிலுள்ள இசுருபாய கல்வியமைச்சின் கட்டிடத்தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கல்வியமைச்சு அமைந்துள்ள கட்டிடத்தில் நான்காவது மாடியில் இன்று காலை 8.45 அளவில் இந்த தீ ஏற்பட்டுள்ளது.

தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

கட்டிடத்தின் குளிரூட்டியில் ஏற்பட்ட மின் ஒழுக்கே இந்த தீ விபத்துக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.