தோல்வியை கற்பழிப்புடன் ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்!!

520

Graeme-Swannபேத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்த தோல்வியால் இங்கிலாந்து வீரர்கள் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் புதுவிதமான சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

தனது சகோதரருடன் பேஸ்புக் இணையதளம் வாயிலாக தகவல்களை பரிமாறிக் கொண்ட ஸ்வான், பேத் டெஸ்டில் அடைந்த தோல்வியை கற்பழிப்புடன் ஒப்பிட்டு சில கருத்துகளை கூறியிருந்தார்.

இது பத்திரிகையிலும் வெளியானதால் சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து தனது கருத்து யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.