ஓரினச் சேர்க்கை அல்லது செக்ஸ் வைத்துக் கொள்ள பார்ட்னரைத் தெரிவு செய்வது அவரவர் விருப்பம் என்று நடிகை த்ரிஷா கருத்து தெரிவித்துள்ளார்.
ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
அரசியல் தலைவர்கள் ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லி பரபரப்பு கிளப்பி வருகிறார்கள். திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இப்போது த்ரிஷாவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளலாம்.
மேலும் செக்ஸ் என்பது அவரவர் விருப்பம். இவரோடுதான் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்றும் செக்ஸ் விடயத்தில் பார்ட்னரை தெரிவுசெய்வது அவரவர் இஷ்டம் எனவும் கூறியுள்ளார்.





