ஐசிசியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!!

813

ICCசர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) சார்பில் டெஸ்ட் அரங்குக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில், தென் ஆபிரிக்க வீரர்களான டிவிலியர்ஸ்(909 புள்ளி), அம்லா(898) தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றனர்.

அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் கிளார்க்(868) மூன்றாவது இடம் பிடித்தார்.

இந்திய வீரர் புஜாரா(801) 7வது இடத்திற்கு தள்ளப்பட்டார், மற்றொரு வீரர் கோஹ்லி (634 புள்ளி) 20வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் சதம் அடித்த அவுஸ்திரேலிய வீரர்கள் வார்னர்(11வது), வட்சன்(32), ஸ்டீவன் ஸ்மித்(37) முன்னேற்றம் அடைந்தனர்.

இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ்(376 புள்ளி), ரொக்கெட் வேகத்தில் 81 இடங்கள் முன்னேறி 73வது இடம் பிடித்தார்.

சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், 903 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் முதலிடத்தில் உள்ளார்.

இந்திய வீரர் அஷ்வின் (808) தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஓஜா(756), ஒருஇடம் முன்னேறி 8வது இடம் பிடித்தார்.