வவுனியாவில் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு பெருகும் ஆதரவு!!

505

உண்ணாவிரதம்

அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்க வேண்டும் என தெரிவித்து கண்டியில் தலதா மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று (03.06.2019) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்ட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக தேவராஜா கோபாலகிருஸ்ணன் என்பவரது தலைமையில் அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் நடவடிக்கையை கண்டித்தும், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் உப தவிசாளர் வசந்த மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.