நோன்புப் பெருநாள் தொழுகை
புனித நோன்பு பெருநாள் திடல் தொழுகை வவுனியா, பட்டானிச்சூர் குடா வயல் திடலில் இன்று இடம்பெற்றுள்ளது.
அதன் தலைவர் மௌலவி எம். எப். சாபிக்கின் (பாரி) தலைமையில் தொழுகைகள் இடம்பெற்றது.
இதன்போது நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை உலகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.