வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரத போராட்டம்!!

569

Muruganராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தனது மனைவி நளினியை சந்திக்க விடவில்லை என்று கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நளினியை முருகன் சந்திக்க சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்யும்.

அந்த வகையில் இன்று நளினி அடைக்கப்பட்டுள்ள பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகன், நளினியை சந்திக்க விடவில்லை. பேசக்கூட முடியவில்லை. சந்திப்பு என்ற பெயரளவுக்கு என்னை பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்று 30 நிமிடம் கழித்து திரும்ப அழைத்து வந்துவிட்டனர்.

எனவே, முறைப்படி எங்களது சந்திப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.