டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்களின் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர் சிவ்நரைன் சந்தர்போல் ஆறாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
நியுசிலாந்து அணியுடனான போட்டியில் ஆட்டமிழக்காது 177 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் அவர் இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் தற்போது 11 ஆயிரத்து 199 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அவருக்கு முன்னாள் உள்ள பிரைன்லாராவின் ஐந்தாம் இடத்தை பிடிப்பதற்கு, சந்தர்போலுக்கு இன்னும் 754 ஓட்டங்களே தேவையாக உள்ளது.
இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 15 ஆயிரத்து 921 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





