தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக அந்த ஊடகத்தின் ஆசிரியரை சென்னை பொலிசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் அதில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியர் பொலிசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து நேற்று அதிகாலை 1 மணியளவில் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் அந்த பெண் ஊழியர் அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பொலிசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த கைது விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அந்த தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம், அந்த பெண் அளித்த பொய்யான புகாரின் அடிப்படையில் எங்கள் தொலைக்காட்சியின் ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
எங்கள் தொலைக்காட்சியில் செய்து வந்த வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட பின்னரே அவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் நம்பகத்தன்மையைப் பற்றி ஆராயாமல் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர் என கூறியுள்ளது.





