திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நடிகர் விஜய் தரிசனம்!!

734

vijayகாரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று நவகிரக சாந்திஹோமம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் தனது மனைவியுடன் காரில் திருநள்ளாறு வந்தார்.

கோவிலில் சனீஸ்வரன் சன்னதியில் நடந்த நவகிரக சாந்தி ஹோமத்தில் 2 பேரும் கலந்து கொண்டனர். ஹோமம் முடிந்ததும் சனீஸ்வர பகவானுக்கு தீபவழிபாடு நடந்தது. நடிகர் விஜய் பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டார்.

பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து விட்டு விஜய் தனது மனைவியுடன் காரில் புறப்பட்டு சென்றார்.