திடீர் சுகயீனம் காரணமாக இளையராஜா வைத்தியசாலையில் அனுமதி!!

460

ilayarajaஇசைஞானி இளையராஜா சுகயீனம் காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார்.
அதன் பின் டிசம்பர் 28ம் திகதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.