கனடாவில் கடும் பனிப்புயல் : 11 பேர் பலி!!

755

Canadaகனடாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயல் காரணமாக டொரொன்டோ மற்றும் கிழக்கு மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பனிப்புயல் காரணமாக பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

டொரொன்டோ, ஒட்டாவா மற்றும் மொன்றியல் விமான நிலையங்களில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்த பனிப்புயலுக்கு குறைந்தது 11 பேர் பலியாகியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.