பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஹமட் ஷேஷாட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சார்ஜாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியின் போது திலகரத்ன டில்ஷானை தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பில் போட்டிக்கு கட்டணத்தில் 50 வீத அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளை மீறியமை தொடர்பில் அஹமட் ஷேஷாட் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது 19 ஆவது ஒவரில் டில்ஷானுக்கும் ஷேஷாட்டிற்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது.
இதன்போது டில்ஷானை அஹமட் ஷேஷாட் தள்ளிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





