எட்டு ஓட்டங்களால் தவறவிடப்பட்ட உலக சாதனை!!

541

southஇந்திய மற்றும் தென்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது.

இந்த போட்டியானது இரு அணிகளுக்கும் வெற்றியை தரும் ஒரு போட்டியான இறுதிவரையில் சுவாரஸ்யமாக இடம்பெற்றது.

458 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி ஒரு தருணத்தில் 197 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த டுபிளசிஸ் மற்றும் ஏ பி டி வில்லியஸ் ஆகியேரது சதங்களுடன் வெற்றி இலக்கை நோக்கி சென்றது. எனினும் இவர்கள் ஆட்டமிழக்க போட்டியில் இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் எட்டு ஓட்டங்கள் பெறப்பட்டன.

இறுதி பந்தில் டேல்ஸ்ட் டேன் ஆறு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த போட்டியில் தென் ஆபிரிக்க அணி 8 ஓட்டங்களால் ஒரு சாதனையை தவறவிட்டது.

டெஸ்ட் போட்டி ஒன்றில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைந்த பெறுமை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு காணப்படுகிறது. அவுஸ்ரேலிய அணியுடனான போட்டியில் 418 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்த அணி பெற்றது.

இதுவே மிகச்சிறந்த வெற்றி இலக்காக கருதப்படுகிறது. எனினும் இந்தியாவுடனான போட்டியில் தென் ஆபிரிக்க அணி 450 ஓட்டங்களை பெற்ற போதிலும், 8 ஓட்டங்களால் இந்த சாதனையை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.