சாப்பிட போன இடத்தில் மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!!

1144

Abuseமருத்துவ கல்லூரி மாணவர்களை கடத்திச் சென்று மிரட்டி உடலுறவில் ஈடுபடச் செய்த எட்டு பேர் அடங்கிய கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகத்தின் மங்களூரு அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்- மாணவி கடந்த வாரம் நள்ளிரவில் சாப்பிட வெளியே சென்றுள்ளனர்.

அப்போது ஹோட்டல் ஒன்றின் வெளியே நின்றிருந்தவர்களின், அருகே வந்து நின்ற வேனில் இருந்த ரவுடிகள், மாணவியையும், மாணவரையும் கடத்திச் சென்றனர். ஒதுக்குபுறமான இடத்தில் இருவரையும் தாக்கிய அந்த கும்பல் மாணவியை கற்பழிக்கப் போவதாக மிரட்டியுள்ளது.

இதனை மாணவர் தடுக்க முயன்ற போது மாணவியை கற்பழிக்குமாறு கத்தியை காட்டி மாணவரை மிரட்டியுள்ளது.
இதில் பயந்து போன மாணவர் வேறு வழியின்றி மாணவியுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

இதனை வீடியோ எடுத்த மர்ம கும்பல், இணையத்தில் வெளியிடாமல் இருக்க 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டியுள்ளது. பணத்தை கொண்டு வருகிறேன் எனக்கூறி அவர்களிடமிருந்து தப்பித்த மாணவி பொலிசில் புகார் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய தீவிர வேட்டையில் எட்டு பேர் கொண்ட கும்பலை பிடித்தனர் அவர்கள் வசம் இருந்த மாணவர் மீட்கப்பட்டார். குற்றவாளிகள் மீது ஏற்கனவே கொலை- கொள்ளை வழக்கு பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.