
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை அதிகளவில் வரழைப்பதற்காக இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபைக்கும், தாய்லாந்து சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபைக்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தில் உள்ள பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும், தாய்லாந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் உள்ள பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு வரவும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது என இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.




