வவுனியாவில் வடக்கு, கிழக்கு ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

152

வவுனியாவில் வடக்கு கிழக்கு ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (21) மாலை ஜேசுவிட் நல்லிணக்க ஒருமைப்பாட்டு பணி அமைப்பின் இயக்குனர் எஸ். பெனடிற் தலைமையில் நடைபெற்றது.

‘பெண்களால் பெண்களுக்காக’ எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக ஓராண்டு காலமாக ஆசிரியர் திறன் விருத்திப் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வட மாகாண மகளிர் விவகார, சிறுவர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்திருந்தார்.

மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மூதூர், விடத்தல்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த 190 ஆசிரியர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்வுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

அருட்பணி மில்றோய் பெனாண்டோ அடிகளார், வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை எம்.ஜெயபாலன் அடிகளார், சிவஸ்ரீ இராஜமோகன் சர்மா, ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.