சர்வதேச ரீதியாக தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில், புதிய சட்டம் இயற்றுவது கடினமான செயல்திட்டம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி நிரந்தர பிரதிநிதி பாலித்த கொஹன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஆறாவது குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பும் அதுவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த குழுவினால், தீவிரவாதத்திற்கு எதிராக சர்வதேச சட்டத்தை அமைக்கும் வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
நியூயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் உள்ள சிங்வா செய்திச் சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தீவிரவாதத்திற்கு எதிராக அமைக்கப்படும் சர்வதேச சட்டம் தொடர்பில் உறுப்பு நாடுகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாலித்த கொஹன இதன் போது குறிப்பிட்டார்.





