வன்னியில் கண்ணொன்றை இழந்த பெண்ணிற்கு நிதியுதவி வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய புலம்பெயர் தமிழர்!!

669

vanni

வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கண் ஒன்றை இழந்த பெண்ணிற்கு கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளில் ஒருவர் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவான ஆ.அரியராஜா என்பவர் தனது 60 வது பிறந்ததினத்தை வன்னியில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு உதவுவதன் மூலம் கொண்டாடினார்.

கண் ஒன்றை இழந்த பெண் ஒருவருக்கு கை கொடுக்கும் வகையில் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை, வலி.வடக்கு பிரதேசசபை துணைத்தவிசாளர் ச. சஜீவன் ஸ்ரீ மூலமாக கையளித்துள்ளார்.