வவுனியா பூந்தோட்டத்தில் நடைபெற்ற ஆழிப்பேரலை நினைவு நாள் நிகழ்வு!!(படங்கள்)

793

கடந்த 2004ம் ஆண்டு ஆழிபேரலையால் உயிர் நீத்த எம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று காலை 9.27 மணிக்கு வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைத்துள்ள ஆழிப்பேரலை நினைவு தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் ஏற்பாடு செய்த இன் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், வைத்தியகலாநிதி சி.சிவமோகன், இ.இந்திரராஜா, தர்மபால செனவிரத்ன,

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உபதலைவர் சிவபாதம் கஜேந்திரகுமார், தமிழர் விடுதலைக் கூட்டனியின் வன்னித் தொகுதித் தலைவர் இராஜ.குகனேஸ்வரன், வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைத் தலைவர் க.சிவலிங்கம், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் செ.சந்திரகுமார்,

ஆலய பரிபாலன சபையினர், வர்த்தக சங்க பிரமுகர்கள், ஊர்ப் பிரமுகர்கள், லயன்ஸ் விளையாட்டுக் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பிரதேச வாசிகளும் கலந்துகொண்டு சுனாமியில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

-படங்கள் சதீஸ்-

12 3 420 21 22