தொடரை வெல்லுமா இந்தியா: இரண்டாவது டெஸ்டில் இன்று மோதல்!!

509

indஇந்தியா மற்றும் தென் ஆபிபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

கிங்ஸ்மேட் மைதானம் சுழலுக்கு சாதகமானது என்பதோடு தென் ஆபிரிக்காவுக்கு ராசியில்லாத மைதானம் என்பதால் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

மூத்த வீரர் கலிஸ் இந்த டெஸ்டுடன் ஓய்வுபெற இருப்பதால் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்று அவரை வெற்றியுடன் வழியனுப்பி வைக்க முயற்சிக்கும். எனவே இந்தப் போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும்.

இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான மோதல் காரணமாக டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகளாக குறைக்கப்பட்டன.

பொதுவாக டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளின் மூலம் எந்த அணி சிறந்தது என்பதை கணிக்க முடியாது. இருப்பினும் ஜோஹன்னஸ்பர்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் சமநிலையில் முடிந்ததால், டேபன் டெஸ்டில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும்.

தவிர இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த தொடரை வென்றால் அன்னிய மண்ணில் தொடர்ந்து டெஸ்ட் தொடரைப் பறிகொடுக்கும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். போதிய பயிற்சி இல்லாததால் ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது. ஆனால், முதல் டெஸ்ட் முடிவடைந்த நிலையில் இந்திய அணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.