சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஜக் கலீஸ் ஓய்வு பெறுகிறார்!!

615

Jacques Kallisஇந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தென் ஆபிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஜக் கலீஸ் அறிவித்துள்ளார்.

இந்தியா-தென் ஆபிபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

இப்போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற தென் ஆபிபிரிக்கா அணியின் முன்னணி வீரரும், சிறந்த சகலதுறை ஆட்டக்காரருமான கலிஸ் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தென் ஆபிபிரிக்க அணிக்காக விளையாடுவதை கௌரவமாக கருதுகிறேன் என்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறவில்லை, உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறன் சிறப்பாக இருந்தால் 2015ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவிற்காக விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கலிசின் ஓய்வு முடிவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.