கிளிநொச்சியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து : சாரதி பலி!!

714

அதிகாலை இடம்பெற்ற விபத்து

கிளிநொச்சி – பூநகரி, பரந்தன் வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரிப்பர் வாகனமும், சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மொதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, சிறிய ரக வாகனம் செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 33 வயதான ஜெனராசா சசிகுமார் என்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.