ஓய்வு பெறுகிறாரா ஹர்பஜன் சிங்?

583

Harbajanஇந்திய அணியில் இடம்பெறாத காரணத்தால் ஓய்வு பெற ஹர்பஜன் சிங் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்(33).

இதுவரையிலும் 101 டெஸ்ட் போட்டிகள்(413 விக்கெட்டுகள்), 229 ஒருநாள் போட்டிகள்(259 விக்கெட்டுகள்), 25 20-20 (22 விக்கெட்டுகள்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இவர் கடைசியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடந்த மார்ச் மாதம் பங்கேற்றார். தற்போது ரஞ்சி கிண்ண போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியில் பங்கேற்று விளையாட முடியாத காரணத்தால் ஓய்வு முடிவில் உள்ளதாக கூறப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில் ரஞ்சி கிண்ண தொடரில் பஞ்சாப் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்று 17 விக்கெட் வீழ்த்தினேன், இதன் பிறகு தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறினேன்.

அவ்வப்போது காயம் தொல்லைகள் தந்தாலும் அதிலிருந்து மீண்டும் அணியில் இடம்பிடிப்பேன். இந்திய அணியில் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் பங்கேற்று அதிக விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதே தனது எண்ணம் என்று தெரிவித்துள்ளார்.