வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி ஆலயத்தின் தேர்த்திருவிழா!!

1363

நயினை நாகபூசனி ஆலயத்தின் தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் தேர் திருவிழா இன்றையதினம் வெகு கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

இலட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வசந்த மண்டப பூசையை தொடர்ந்து பிள்ளையார் மற்றும் முருகனுடன் நாகபூசனி அன்னையின் உள்வீதி உலா இடம்பெற்றது.

அலங்கரித்த தேரில் பிரம்மாண்டமான கோலத்துடன் இடம்பெற்ற அன்னையின் தேர்த்திருவிழாவை காண இலட்சக்கணக்கானவர்கள் குழுமியிருந்தமை சிறப்பம்சம்.