வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேள் கலந்துரையாடல்!!(படங்கள்)

805

வட மாகாணசபையால் மக்களிடம் இருந்து தேவைகளை இனம்காணும் செயற்பாட்டை முன்னெடுத்து வரும் நிலையில் இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

வட மாகாணசபைக்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் அபிவிருத்தி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இக் குழு மக்களிடமிருந்து அவர்களின் கிராமங்களில் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை அடையாளம் காணும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.

அதன் ஓர் அங்கமாக வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் தேவைகள் அடையாளம் காணப்பட்டன.

இவ் விடயம் தெடர்பாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் கேட்டபோது, வட மாகாணசபையால் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்களை மக்களிடம் இருந்து அடையாளம் காணுவதற்காக இச் செயற்பாட்டை முன்னேடுக்கின்றோம்.

மக்கள் சந்திப்பின் பின்னர் திணைக்கள தலைவர்களை சந்தித்து அவர்களிடம் மக்களுக்கான தேவைகள் தொடர்பில் ஆராயும் கூட்டங்களை நடத்துவோம்.

தொடர்ந்து அந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களிடம் உள்ள மக்களுக்கான தேவைகளை இனம் கண்டு இறுதியாக தேவைகளை வகைப்படுத்தி அறிக்கையொன்றை எதிர்வரும் 10 ஆம் திகதி வட மாகாண முதலமைசசரிடம் சமர்ப்பிப்போம்.

அதன் பின்னர் பாதீட்டின் அடிப்படையில் பணிகளை முன்னெடுக்க உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

123