வவுனியா இறம்பைக்குளம் சிற்றி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் விளையாட்டு விழா![??]

1062

வவுனியா இறம்பைக்குளம் சிற்றி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் விளையாட்டு விழா கடந்த 20.07.2019(சனிக்கிழமை) நிர்வாக இயக்குனர் திரு நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் திரு.ஜூட்பீரிஸ் (சுகாதார வைத்திய அதிகாரி -வவுனியா) பிரதமவிருந்தினனாகவும் திரு.தர்மேந்திரா(உதவி பிரதேச செயலாளர் -வவுனியா வடக்கு பிரதேச செயலகம்) சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர் .

மேலும் திரு.ஸ்ரீதரன்(அதிபர் – திருஞானசம்பந்தர் வித்தியாலயம்),திரு.நிரஞ்சன் (உடற்கல்வி ஆசிரியர் திருஞானசம்பந்தர் வித்தியாலயம்),திருமதி.கீர்த்தனா அன்பழகன்(நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் -அபிமான நிறுவனம்) திரு. இளஞ்சிங்கம்(சிறுவர் உரிமைகள் பண்பாட்டு உத்தியோகத்தர்-பிரதேச செயலகம் -வெண்கல செட்டிகுளம்),திருமதி .பூ.ராஜா(தலைமை தாதி) ,திருமதி.கிருஷாந்தன் (ஆசிரியை ஆசிகுளம் அ.த.க.பாடசாலை),திருமதி.புலேந்திரன் (முகாமைத்துவ உதவியாளர் -RDHS வவுனியா),திரு. செல்வகுமார் (மாவட்ட சிறுவர்பாதுகாப்பு உத்தியோத்தர்),திரு.ஸ்ரீகாந்தன் (ஆசிரியர் கோவில்குளம் இந்துக்கல்லூரி) ,திரு. ராகுல் பிரசாத் (கிராமசேவையாளர் -இறம்பைக்குளம்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .