வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணற்றிலிருந்து ஆயு தங்கள் மீட்பு!!

617

ஆயு தங்கள் மீட்பு

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக்கிணறொன்றில் இருந்து இன்று காலை (22.07) இராணுவத்தினரால் ஆயு தங்கள் சில மீட்கப்பட்டுள்ளது.

இரா ணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து ஆயு தங்களை மீட்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

இதன்போது விடு தலைப்பு லிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 81எம்.எம்.குண் டுகள் 11, ரி.56 துப்பாக்கி , மிதி வெடி உட்பட சில ஆயு தங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயப்பகுதி (வருவாய்த்துறை) செயற்பட்டு வந்த பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இத் தேடுதலானது ஓமந்தையின் 563 ஆவது பிரிகேட்டின் கேணல் பண்டுக்க பெரேரா மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி நிசந்த ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது