வவுனியாவில் ம து போ தையில் மோட்டர் சைக்கிள் செலுத்தியவருக்கு 76 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

1413

ம து போ தையில்

ம து போ தையில் மோட்டர் சைக்கிளில் ஆவணங்களின்றி பயணித்தவருக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றால் 76 ஆயிரம் ரூபாய் தண்டமாக அறிவிடப்பட்டது.

நேற்றைய தினம் ம துபோ தையில் மோட்டர் சைக்கிள் காப்புறுதி பத்திரம், வரிப்பத்திரம் இன்றி பயணித்த நபர் ஓருவரை வவுனியா போக்குவரத்து பொலிசார் கை து செய்திருந்தனர்.

குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்திய போது ம து போ தையில் வாகனம் செலுத்தியமை, காப்புறுதி பத்திரம் இல்லாமல் பயணித்தமை, வரி பத்திரம் இல்லாமல் பயணித்தமை ஆகிய 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த நபருக்கு 76 ஆயிரம் ரூபாய் குற்றப் பணமாக செலுத்த நீதிமன்று உத்தரவிட்டது.