தென் ஆபிரிக்க வீரர் கலிஸ் ஓய்வு பெறப் போவதை அறிந்து அதிர்ந்து விட்டேன் என வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்கா- இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்நிலையில் டர்பன் மைதானம் ஆசிய நாட்டு மைதானம் போன்று உள்ளது என தென் ஆபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்கல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் டர்பனின் கிங்ஸ்மீட் மைதானம் ஆசிய ஆடுகளத்தை போன்று உள்ளது. 13 ஓவருக்கு பிறகே பந்து பார்ப்பதற்கு 60 ஓவர் வீசப்பட்டது போன்று உள்ளது. இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
கலிசின் ஓய்வு முடிவை அறிந்ததும் அதிர்ந்து விட்டேன் எனது சிறந்த நண்பர் அவர். இந்த போட்டியை வென்று கலிசுக்கு அர்பணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.





