வவுனியாவில் முன்னறிவித்தலின்றி அடிக்கடி மின்வெட்டு : பரீட்சை நேரத்தில் மாணவர்கள் அவதி!!

625

மின்வெட்டு

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி அடிக்கடி இடம்பெறம் மின்வெட்டு காரணமாக பரீட்சை நேரத்தில் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் எந்தவிதமான முன்னறிவித்தலுமின்றி கடந்த சில நாட்களாக மின்வெட்டு இடம்பெறுகின்றது. இதன்காரணமாக அரச அலுவலகங்கள், வர்த்தகர்கள், உத்தியோகத்தர் எனப் பலரும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவைதவிர, தற்போது மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் எதிர்வரும் 4 ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சையும், எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் உயர்தரப் பரீட்சையும் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு இடம்பெறும் மின்வெட்டினால் மாணவர்களது கல்வி நடவடிக்கைகளும், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளது.

ஏற்கனவே வட மாகாணத்தின் கல்வி கீழ் நிலை நோக்கி செல்லும் நிலையில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்வெட்டுக்களும் மாணவர்களின் பெறுபேற்றை கேள்விக்குட்படுத்தியுள்ஏதாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.