ஒபாமாவின் உதவியை நாடும் அமெரிக்கர்!!(வீடியோ)

907

அல்கொய்தா தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய அமெரிக்கர் ஒருவர், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் உதவியை நாடியுள்ளார்.

பாகிஸ்தானில் ஜே.இ.ஆஸ்டின் அசோசியேட்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தை வார்ன் வெயின்ஸ்டீன் (72) என்பவர் நடத்தி வந்தார்.

USஇவர் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லாகூரில் தன் வீட்டிலிருந்த போது அல்கொய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இவரை விடுதலை செய்ய கோரி கேட்டு கொண்ட அமெரிக்கா, அல்கொய்தாவுடன் பேச்சு வார்த்தை நடத்த மறுத்துவிட்டது.

இதையடுத்து தன்னை விடுவிக்க உதவி செய்யும்படி ஜெவிஷ் சமுதாயம் மற்றும் இஸ்ரேல் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த இரண்டு வீடியோ பதிவுகள் கடந்த ஆண்டு வெளியானது.

ஆனால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது விமான தாக்குதலை நிறுத்தினால்தான் வெயின்ஸ்டீனை விடுதலை செய்வோம் என்று அல்கொய்தா மிரட்டி வருகிறது.

இந்நிலையில் இவ்வாண்டு அவர் ஒபாமாவிடம் விடுதலைக்காக உதவி கேட்டிருப்பது போல் 13 நிமிடங்கள் அடங்கிய வீடியோ மற்றும் கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இது உண்மையான வீடியோதானா என்பது உறுதி செய்யப்படவில்லை.