ஏற்பட்ட விபரீதம்
திருகோணமலை – கந்தளாயில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றொடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து கந்தளாய் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இரண்டு முச்சக்கர வண்டிகளும் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததமையே இவ்விபத்து இடம்பெற காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான இரண்டு முச்சக்கர வண்டிகளும் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.