
முதல் ரவுண்டில் மொடன் வேடங்களாக நடித்து வந்த தமன்னா இரண்டாவது ரவுண்டில், கிராமத்து கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், முன்னணி நாயகர்கள் நடிக்கும் கிராமத்து படங்களின் வாய்ப்புகளை கைப்பற்ற திட்டம் தீட்டினார்.
ஆனால்,அப்படி அவர் எந்த கம்பெனி படத்துக்கு கல்லெறிந்தாலும் அங்கிருப்பவர்கள் ஏற்கனவே லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்து விட்டோமே என்று கீறல் விழுந்த ரெக்கோட் போல் ஒரே பதிலை அளிக்கின்றனராம்.
இது மட்டுமல்லாமல் லட்சுமிமேனன் நடித்த, படங்களெல்லாமே ஹிட் அவரது சம்பளமும் மிகக்குறைவு என்றும் அவருக்கு சாதகமாக பேசுகின்றனராம். இதனால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் தமன்னா தடுமாறிப்போய் நிற்கிறார்.





