யாழ்.கச்சேரி பகுதியில் வாகன விபத்து!!

647

வாகன விபத்து

யாழ்ப்பாணம் – கச்சேரி, பெந்தேகொஸ்தே ஆலயத்திற்கு அருகாமையில் இன்று காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் உள்ள வீதியினூடாக பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, இரு வாகனங்களும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.