ஆக்சனில் களமிறங்கும் நயன்தாரா!!

511

Nayanநயன்தாரா ஆக்சன் நடிகையாக மாறுகிறார். கதாநாயகிகள் எல்லோருக்கும் விஜயசாந்தி போல் அடிதடி சண்டை போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. சினேகா பவானி படத்தில் நடித்து இந்த ஆசையை நிறைவேற்றினார். இது விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தின் ரீமேக் ஆகும்.

அனுஷ்கா இரண்டாம் உலகம் படத்தில் வாள் சண்டை போட்டு நடித்தார். ருத்ரமாதேவி சரித்திர படத்திலும் ஆக்சன் நடிகையாக வருகிறார். வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சிகள் பெற்று இதில் நடிக்கிறார்.

தற்போது நயன்தாராவும் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் படத்தில் ஆக்சன் அவதாரம் எடுக்கிறார். இந்த படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் ஜெயம்ரவி கொக்கி விளையாட்டு வீரராக வருகிறார். நயன்தாரா கராத்தே மாஸ்டராக நடிக்கிறார். இதற்காக நயன்தாரா கராத்தே பயிற்சி பெற்றுள்ளாராம்.

ஆக்சன் சீன்களில் தாவி குதித்து வில்லன்களுடன் சண்டை போட்டு நயன்தாரா நடித்துக் கொண்டு இருக்கிறாராம். இப்படத்துக்கு பிறகு நயன்தாராவுக்கு ஆக்சன் நடிகை இமேஜ் உருவாகும் என்கின்றனர் படக்குழுவினர்.