மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ ஜீப் வண்டி தீ விபத்து!!

820

தீ விபத்து

மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை மட்டக்களப்பு பேருந்து நிலையத்தின் பின்பகுயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் அருகே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ புனர்வாழ்வு பிரிவின் ஜீப்வண்டி ஒன்றும் தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.

எனினும் அருகில் இருந்தவர்கள் தீயினைக் கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஜீப் வண்டி ஓரளவு சேதத்துடன் தீயணைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத் தீவிபத்து தொடர்பான விசாரணை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இதேவேளை, சம்பவ இடத்திற்கு பொலிஸ் குற்ற தடயவியல் பிரிவு மற்றும் இராணுவத்தினர். வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.