வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலையத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை!!(படங்கள்)

524

வவுனியா பிரதேசசெயலகமும் “Child First” நிறுவனமும் இணைந்து பூவரசங்குளம் மகா வித்தியாலையத்தில் நேற்று சனிக்கிழமை காலை 9.00 மணிதொடக்கம் மாலை 5.00 மணிவரை பூவரசங்குளம் மற்றும் வேலங்குளம் ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவையொன்றை நடாத்தியிருந்தது

இன் நடமாடும் சேவையில் திருமணப்பதிவுகள் பிறப்பு இறப்பு பதிவுகள் மற்றும் காணி சம்மந்தமான சேவைகள் முதியோர் மேம்பாடு சம்மந்தமான சேவைகள், தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்றவையும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் பிரதேச செயலகங்களால் வழங்கப்படுகின்ற அனைத்து சேவைகளையும் மக்கள் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. இன் நடமாடும் சேவையின் மூலம் பெருமளவான மக்கள் பயன்பெற்றது குறிபிடத்தக்கதாகும்.

v1 v3 v4 v5