வவுனியா நகரசபை வாகனம் முழுவதும் விளம்பர பாதாதைகள் : நடந்தது என்ன?

659

விளம்பர பாதாதைகள்

வவுனியா கோவிற்குளம் பகுதியில் வீதிகளில் காணப்பட்ட பாதாதைகளை அகற்றும் பணியில் நகரசபையினர் இன்று (08.08.2019) காலை 10.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை ஈடுபட்டனர்.

கோவிற்குளம் சிதம்பரபுரம் பிரதான வீதியில் காணப்படும் பெரும்பாலான மின்கம்பங்களில் விளம்பர பாதாதைகள் காணப்பட்டது.

இதன் காரணமாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன் கோவிற்குளம் வீதியின் அனைத்து மின்கம்பங்களிலும் விளம்பர பதாதைகளாக காணப்பட்டன.

இதனை அகற்றும் பணியில் நகரசபையினர் இன்று ஈடுபட்டிருந்தனர். தற்போது அப்பகுதியின் காணப்படும் மின்கம்பங்கள் அனைத்தும் வெறுமையாக காணப்படுவதுடன் குறித்த வீதி அழகாகவும் காணப்படுன்றது.