ஒரு கிலோ பால் மாவின் விலையை 250 ரூபாவினால் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலக் சந்தையில் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கை நுகர்வோரின் நலனைக் கருத்திற் கொண்டு பால் மா விலை உயர்த்தப்படவில்லை. உலக சந்தையில் பால் மாவின் விலை உயர்ந்த போதிலும், பால் மா உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய விலை உயர்வினை மேற்கொள்ள முடியாது.
அடுத்த வாரத்தில் பால் மாவின் விலை உயர்த்தப்படும் என்ற வதந்தி உண்மைக்குப் புறம்பானது என நுகர்வோர் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பால் மாவின் விலை உயர்த்தப்பட உள்ளதாக அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்னளர்.