வவுனியாவில் விசேட தேவையுடையோரை சந்தித்து கலந்துரையாடிய வடமாகாண முன்னாள் முதலமைச்சர்!!

596

வடமாகாண முன்னாள் முதலமைச்சர்

வவுனியா, வரோட், தாய்மடி இல்லத்தில் தங்கியிருக்கும் விசேட தேவையுடையோரை சந்தித்து அவர்களது பிரச்சனைகள் தொடர்பில் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய சீ.வி.விக்கினேஸ்வரன் கேட்டறிந்து கொண்டார். நேற்று (11.08) மாலை 6 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

வவுனியாவிற்கு விஜயம் செய்த முன்னாள் முதலமைச்சர் வரோட், தாய்மடியில் தங்கிருக்கும் 50 இற்கும் மேற்பட்ட விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதுடன், அவர்களது தேவைகள் குறித்தும் அவர்களை பராமரிக்கும் அருட்தந்தையர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது முதலமைச்சரை மாலை அணிவித்து வரவேற்ற விசேட தேவையுடையோர் தம்மை வந்து சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பில் தமது மகிழ்ச்சியையும் இதன்போது வெளிப்படுத்தினர்.

இச்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா அமைப்பாளர் செ.ஸ்ரீதரன், இளைஞரணி தலைவர் கிறிஸ்ண மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.