தென்னாபிரிக்க அணியுடன் படுதோல்வி அடைந்த இந்தியா : வெற்றியுடன் விடைபெற்றார் கலிஸ்!!

521

SA

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஜோகனர்ஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிந்த நிலையில் டேர்பனில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து விளையாடிய தென்னாபிரிக்க அணி 500 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, 223 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 58 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.

எளிய இலக்கை விரட்டிய தென்னாபிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 59 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது.

kallis