கல்வி அமைச்சின் முடிவு வறிய மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்!!

576

Karunasenaஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இரத்துச் செய்ய வேண்டும் என்பது கல்வியமைச்சரின் தீர்மானம் அல்ல எனவும் அது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கல்வியமைச்சருமான கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை இரத்துச் செய்வது என்பது நாட்டில் சிறப்புரிமைகள் கிடைக்காத வறிய மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் வசதிகளுடன் கூடிய பாடசாலைகளில் சேரவும் உதவிகளை பெறவும் சந்தர்ப்பம் கிடைக்கும். இதனை இரத்துச் செய்வதன் மூலம் அரசாங்கம் பலனை பெற முயற்சித்து வருகிறது என்றார்.