பேராதனை வைத்தியசாலையின் மனநோயாளர் பிரிவில் நோயாளி ஒருவர் சக நோயாளியை அடித்துக் கொலை செய்துள்ளார். கட்டில் கம்பியின் மூலம் கழுத்து மற்றும் முகப்பகுதியை தாக்கியதன் காரணமாக நோயாளி உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புளத்கொகுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான நபர் இதன்போது உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று பேராதனை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.