மதவாச்சி – மன்னார் வீதியில் இளைஞன் சடலமாக மீட்பு!!

528

Murமதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள மைல் கல்லுக்கருகில் நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்த இந்நபர் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை அந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சீப்புகுளம் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.