புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டமில்லை : பந்துல குணவர்தன!!

506

Banthulaஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டமில்லை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளுக்கான பரீட்சைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படும் என்ற கருத்து தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிராமப் புற மாணவர்களின் கல்வி வாய்ப்புக்களை வரையறுப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.