கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் என்ற செய்தி உண்மையில்லை!!

908

radhika

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ் டில்கோ விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று கொழும்பு குடிவரவு குடியகல்வு பிரிவின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தொடர்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடம் எம் அதிகாரிகள் சில விசாரணைகள் நடத்தியிருந்தாலும் நாம் அவரை வீட்டுக்காவலில் வைத்தமை என்பது உண்மைக்குப் புறம்பான செய்தி என்பதை மட்டும் எம்மால் உறுதிபட கூற முடியும் என தெரிவித்தார் அந்த குடிவரவு குடியகல்வு அதிகாரி.